அமீரக செய்திகள்
சலுகை விலையில் டிக்கெட்டுகளை வழங்கும் சலாம் ஏர்

ஓமானின் குறைந்த கட்டண விமான நிறுவனமான சலாம் ஏர், குறிப்பிட்ட காலத்திற்கு குறைந்த விலையில் டிக்கெட்டுகளை வழங்கவுள்ளது.
பஹ்ரைன், பாக்தாத், துபாய், தோஹா, தம்மாம், புஜைரா, குவைத் மற்றும் ரியாத்தில் இருந்து ஓமனுக்கு செல்லும் விமானங்களுக்கு இந்த விளம்பரம் பொருந்தும்.
இந்த ‘குறைந்த கட்டண மெகா விற்பனை’ சலுகை மூன்று நாட்களுக்கு மட்டுமே(13,14,15-08-2024) செல்லுபடியாகும். செப்டம்பர் 16, 2024 முதல் மார்ச் 31, 2025 வரையான பயணக் காலத்திற்கு முன்பதிவு செய்யலாம்.
தள்ளுபடி கட்டணங்கள் Dh180 முதல் தொடங்கும் மற்றும் விமான நிறுவனத்தின் இணையதளத்தில் மட்டுமே கிடைக்கும்.
#tamilgulf