UAE: ரஷ்ய ஜனாதிபதி புதின் இந்த வாரம் ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு செல்லவுள்ளதாக தகவல்

UAE: ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் இந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சவுதி அரேபியாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளதாக புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியதை மேற்கோள்காட்டி ரஷ்ய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய Opec+ எண்ணெய் உற்பத்தியாளர்களின் குழு, ஒரு நாளைக்கு சுமார் 2.2 மில்லியன் பீப்பாய்கள் என தன்னார்வ உற்பத்தி குறைப்புக்கு கடந்த வியாழன் அன்று ஒப்புக்கொண்டதை அடுத்து இந்த பயணம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
2.2 மில்லியன் bpd-ன் எண்ணிக்கையானது, தற்போதுள்ள சவுதி மற்றும் ரஷ்ய தன்னார்வக் குறைப்புகளின் நீட்டிப்பு 1.3 மில்லியன் bpd-ஐ உள்ளடக்கியது.
புதின் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்வார் என்றும், பின்னர் சவுதி அரேபியாவிற்கு சென்று, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவர் என்றும் உஷாகோவ் கூறியுள்ளார்.
மேலும், “இது மிகவும் பயனுள்ள பேச்சுவார்த்தைகளாக இருக்கும் என்று நான் நம்புகிறேன், இது மிகவும் முக்கியமானது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று உஷாகோவ் கூறினார்.