மோசமான வானிலை காரணமாக அனைத்து சாலை சோதனைகளும் ரத்து

மோசமான வானிலை காரணமாக துபாய் ஓட்டுநர் உரிமத்தைப் பெறுவதற்கு திங்கள்கிழமை திட்டமிடப்பட்ட அனைத்து சாலை சோதனைகளும் ரத்து செய்யப்பட்டதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல காலை நேரத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும் சாலைகள் வழியாக செல்ல வேண்டியிருந்தது .
சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கூறுகையில், “வானிலை நிலை மற்றும் மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, இன்று திட்டமிடப்பட்ட ஓட்டுநர் சோதனைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.”
துபாயில் வசிக்கும் ஃபஸ்னா முகமது தனது இறுதி சாலை சோதனையை திங்களன்று முடிக்கவிருந்தார், அப்போது அவருக்கு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டது. “இது இன்று எனது இறுதி RTA சாலை சோதனை, ஆனால் வானிலை காரணமாக வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக எனக்கு அறிவிப்பு வந்தது” என்று ஃபஸ்னா கூறினார். மேலும், “இது ஒரு புத்திசாலித்தனமான முடிவு என்று நான் நினைக்கிறேன், மழையில் நான் ஓட்ட வேண்டியதில்லை என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.” என்று கூறினார்.



