வரவிருக்கும் மழை குறித்து குடியிருப்பாளர்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வானிலை ஆய்வுத் துறையின் வல்லுநர்கள், வரவிருக்கும் மழையால் எந்த கவலையும் இல்லை என்றும், இந்த மழை கடந்த வார நிகழ்வோடு ஒப்பிடக் கூடியதாக இருக்காது என்றும் உறுதியாக கூறியுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை அழிவுகரமான புயல்களின் போது வரலாறு காணாத மழைப் பொழிவின் தாக்குதலைத் தொடர்ந்து இந்த வாரம் தொடங்கும் கூடுதல் மழை நிலைமைகளுக்கு நாடு தயாராகி வருகிறது.
தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவிப்பின் படி இந்த வாரம் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது மற்றும் இன்று எமிரேட்ஸின் குறிப்பிட்ட பகுதிகளில் கூடுதல் மழை எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
புதன் கிழமைக்குள் வெப்பநிலை ஐந்து முதல் ஏழு டிகிரி வரை குறைவதோடு வானிலை நிலைமை மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.