அமீரக செய்திகள்

கரடுமுரடான மலைப் பகுதியில் சிக்கித் தவித்த 8 பேர் மீட்பு

கரடுமுரடான மலைப் பகுதியில் சிக்கித் தவித்த 8 பேரை ராஸ் அல் கைமா காவல்துறையின் ஏர் விங் துறையினர் மீட்டனர். வெளிநாட்டு பிரஜைகள் 3,500 அடி உயரத்தில் சிக்கித் தவித்ததாக ஆணையம் தெரிவித்தது.

ராஸ் அல் கைமா காவல்துறையின் விமானப் பிரிவின் தலைவரான கர்னல் அப்துல்லா அலி அல் ஷாஹி, எமிரேட்டின் வடக்கே உள்ள மலைகளில் உள்ள குழு குறித்து அதிகாரிகளுக்கு ஒரு துயர அழைப்பு வந்தது. உடனடியாக தங்கள் ஹெலிகாப்டர்களில் ஒன்றை குறிப்பிட்ட இடத்திற்கு அனுப்பி வைத்தனர். சிக்கித் தவித்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஒத்துழைப்புடன் வெளியேற்றப்பட்டனர். எட்டு நபர்களும் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகக் கண்டறியப்பட்டு பாதுகாப்பான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று கூறினார்.

மலைப்பகுதிகளுக்குச் செல்லும்போது பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் கூறினர். மேலும், கரடுமுரடான நிலப்பரப்புகள் மற்றும் பள்ளத்தாக்கு நீரோடைகளில் இருந்து விலகிச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button