அமீரக செய்திகள்

முக்கிய சாலையில் வேக வரம்பு குறைப்பு: விதிமீறலில் ஈடுபட்டால் 3,000 திர்ஹம் வரை அபராதம்

அல் இத்திஹாத் சாலை வழியாக தினமும் துபாய்க்கும் ஷார்ஜாவுக்கும் இடையே வாகனம் ஓட்டும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 20 முதல் , சாலையின் பெரும்பகுதியில் வேக வரம்பு மணிக்கு 100 கிமீ முதல் 80 கிமீ வரை குறைக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

அல் இத்திஹாத் சாலையில் ஷார்ஜா-துபாய் எல்லையில் இருந்து அல் கர்ஹூத் பாலம் வரை, விதிமுறைகள் அமலில் இருக்கும் பகுதியில் புதிய போக்குவரத்துப் பலகைகள் வைக்கப்படுவதை ஓட்டுநர்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அதிவேகமாக இந்த பகுதிகளில் பயணித்தால் போக்குவரத்து விதிமீறலாகும், இது ஒரு ஓட்டுநர் வேகவரம்பை மீறும் அளவைப் பொறுத்து, Dh300 முதல் Dh3,000 வரை அபராதம் விதிக்கப்படும். சில சந்தர்ப்பங்களில் கருப்பு புள்ளிகளுடன் வாகன பறிமுதல் செய்யப்படும்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் கூட்டாட்சி போக்குவரத்து சட்டத்தின்படி எவ்வளவு அபராதம் விதிக்கப்படும்?

அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 20 கிமீ மீறினால்: Dh300 அபராதம்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 30 கிமீ மீறினால்: திர்ஹம் 600 அபராதம்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 40 கிமீ மீறினால்: 700 திர்ஹம் அபராதம்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 50 கிமீ மீறினால்: Dh1,000 அபராதம்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கிமீ மீறினால்: திர்ஹம் 1,500 அபராதம், 6 கருப்பு புள்ளிகள் மற்றும் 15 நாள் வாகனம் பறிமுதல்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 60 கி.மீ.க்கு மேல் மீறினால்: 2,000 திர்ஹம், 12 கருப்பு புள்ளிகள், 30 நாள் வாகனம் பறிமுதல்
அதிகபட்ச வேக வரம்பை மணிக்கு 80 கிமீக்கு மேல் சென்றால்: 3,000 திர்ஹம் அபராதம், 23 கருப்பு புள்ளிகள் மற்றும் 60 நாள் வாகனம் பறிமுதல்

சாலையில் அமைக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச வேக வரம்பிற்குக் கீழே வாகனத்தை ஓட்டினால்: 400 திர்ஹம் அபராதம்

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button