துபாயின் முக்கிய சாலையில் வேக வரம்பு குறைப்பு

துபாயின் அல் இத்திஹாத் சாலையில் உள்ள ஒரு முக்கிய பகுதியின் வேக வரம்பை அதிகாரிகள் குறைத்துள்ளனர். நவம்பர் 20 முதல், ஷார்ஜா மற்றும் அல் கர்ஹூத் பாலம் இடையே உள்ள வேக வரம்பை மணிக்கு 100 கிமீ வேகத்தில் இருந்து 80 கிமீ ஆக அதிகாரிகள் குறைத்துள்ளனர்.
புதிய வேக வரம்பு அல் இத்திஹாத் சாலையில் ஷார்ஜா-துபாய் எல்லையில் இருந்து அல் கர்ஹூத் பாலம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதிய அதிகபட்ச வேக வரம்பை பிரதிபலிக்கும் வகையில் அல் இத்திஹாத் சாலையில் உள்ள போக்குவரத்து அடையாளங்கள் புதுப்பிக்கப்படும். சிவப்பு கோடுகள் வேகக் குறைப்பு மண்டலத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். சாலையில் உள்ள ரேடார்கள் அதற்கேற்ப சரிசெய்யப்படும்.
துபாயில் இருந்து ஷார்ஜாவிற்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் இந்த பாதையை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.