ரியல் எஸ்டேட் முகவர்களுக்கு ஆன்லைனில் போலி சொத்துப் பட்டியலை அகற்ற 3 நாட்கள் அவகாசம்

துபாயில் உள்ள ரியல் எஸ்டேட் முகவர்கள் தங்கள் டிஜிட்டல் தளங்களில் விற்பனை அல்லது வாடகைக்கு கிடைக்காத அனைத்து சொத்துக்களையும் அகற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக துபாய் நிலத் துறை முகவர்களுக்கு மூன்று நாள் காலக்கெடுவை வழங்கியுள்ளது.
இது தொடர்பாக துபாய் நிலத் துறை கூறுகையில், “எங்கள் திட்டமிடப்பட்ட மின்னணு ரியல் எஸ்டேட் போர்ட்டல்களை ஆய்வு செய்த போது, விற்பனை அல்லது வாடகைக்கு கிடைக்காத சில சொத்துக்கள் இன்னும் ரியல் எஸ்டேட் முகவர்களால் போர்ட்டல்களில் காட்டப்படுவதை நாங்கள் கவனித்தோம்.
அதன்படி, அனைத்து ரியல் எஸ்டேட் அலுவலகங்களும் டிஜிட்டல் ரியல் எஸ்டேட் போர்ட்டல்களை மூன்று வேலை நாட்களுக்குள் புதுப்பிக்க வேண்டும், இதன் விளைவாக வாடகை அல்லது விற்பனைக்கு கிடைக்காத அனைத்து சொத்துக்களும் அகற்றப்படும்” என்று தெரிவித்துள்ளது.
UAE-ல் பல ஆன்லைன் தளங்கள் விற்பனை மற்றும் வாடகைக்கு சொத்துக்களை வழங்குகின்றன. Dubizzle, Property Finder, Bayut, Asteco, Allsopp & Allsopp ஆகியவை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சொத்து வாங்குதல் மற்றும் வாடகைக்கு செயல்படும் மிகவும் பிரபலமான தளங்களாகும்.
அனைத்து சொத்து தரகர்கள் மற்றும் போர்டல்கள் தங்கள் இணையதளங்களில் இருந்து கிடைக்காத சொத்துக்களை அகற்றியதற்கான ஆதாரங்களுடன் licensing@rera.gov.ae க்கு மின்னஞ்சல் அனுப்புமாறு துபாய் நிலத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.