படித்ததில் பிடித்தது

ராமகிருஷ்ண பரமஹம்சரின் இனிய சிந்தனை

The sweet thought of Ramakrishna Paramahamsa

இனிய சிந்தனை

🏕ஒரு முறை ராமகிருஷ்ண பரமஹம்ஸரிடம் சீடர் ஒருவர் கேட்டார். “ஸ்வாமி, நமக்குப் புத்தி சொல்பவரே தவறு செய்பவராக இருந்தால் அந்த புத்திமதியை எப்படி எடுத்துக்கொள்வது?”

“ஒரு மாணவன் குருவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை” என்றார் பரமஹம்ஸர். “குருவே தவறு செய்தால் அவர் சொல்லை எப்படி நாம் ஏற்றுக்கொள்வ்து?” என்று கேட்டார் சீடர்.

பரமஹம்ஸர் முகத்தில் புன்னகை. “அழுக்குத் துடைப்பம்தானே அறையைச் சுத்தம் செய்கிறது?”

சீடர் அதன் பிறகு கேள்வி எதுவும் கேட்கவில்லை.

துடைப்பம் அழுக்காக இருந்தாலும் அது சுத்தம் செய்கிறது. அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் துடைப்பம் அழுக்காக இருக்கிறதே எனக் கவலைப்படுவதில்லை.

ஒரு சிஷ்யனின் மனநிலை இப்படி இருக்க வேண்டும். குருவின் சொல் தனக்குப் பயன்படுமா என்பதைத்தான் பார்க்க வேண்டும். குருவின் தகுதியைப் பார்க்க வேண்டிய பொறுப்பு அவனுக்கு இல்லை.

தான் தன் சொல்லுக்குத் தகுதியானவராக இருக்கிறோமா எனப் பார்ப்பது குருவின் பொறுப்பு.,

குருவும் சிஷ்யனும் தத்தமது பொறுப்பை ஒழுங்காகச் செய்தால் எது சரி, எது தவறு என்ற கேள்வியே வராது அல்லவா?

பூனையையும் குரங்கையும் வைத்து இதே விஷயத்தை விளக்குவதுண்டு. பூனை தன் குட்டியை வாயில் கவ்விக்கொண்டு போகும். குட்டி வளரும்வரை அது குறித்த எல்லாப் பொறுப்பையும் தாய்ப் பூனையே ஏற்றுக்கொள்ளும்.

குரங்கு விஷயத்தில் இது நேர் மாறாக இருக்கும். குட்டிதான் தாயின் கழுத்தை இறுக்கமாகக் கட்டிக்கொள்ளும். தாய் கவலையே படாது.

சொல்லிக் கொடுப்பவர் பூனைத் தாய் போலவும், கற்றுக்கொள்பவர் குரங்குக் குட்டிபோலவும் இருந்துவிட்டால் பிரச்சினையே இல்லை…

#tamilgulf

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com