அமீரக செய்திகள்
உயிரிழந்த எமிராட்டி தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி இரங்கல்

சோமாலியாவில் பணியாற்றிய போது உயிரிழந்த எமிராட்டி தியாகிகளின் குடும்பத்தினருக்கு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.
இந்த துயர சம்பவம் தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஜனாதிபதி வெளியிட்ட ட்வீட்டில் கூறப்பட்டுள்ளதாவது:-
“சோமாலியாவில் சேவை செய்யும் போது உயிர் தியாகம் செய்த வீர எமிரேட்டியர்களின் குடும்பங்களுக்கு எனது இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மரியாதையுடனும் தைரியத்துடனும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நமது தேசத்தையும் அதன் மதிப்புகளையும் பாதுகாப்பதற்காக அவர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். அவர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது, அவர்கள் நித்திய அமைதியில் ஓய்வெடுக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.” என்று கூறியுள்ளார்.
#tamilgulf