அமீரக செய்திகள்
நிலையற்ற வானிலை காரணமாக கால்பந்து போட்டிகள் ஒத்திவைப்பு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வார இறுதியில் நடைபெறவிருந்த கால்பந்து போட்டிகள் நிலையற்ற வானிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கால்பந்து சங்கம் (UAEFA) தெரிவித்துள்ளது.
தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, மார்ச் 8 வெள்ளிக்கிழமை முதல் மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை வரை திட்டமிடப்பட்ட பல்வேறு போட்டிகளை ஒத்திவைக்க UAEFA முடிவெடுத்துள்ளது.
ஒத்திவைக்கப்பட்ட போட்டிகளின் புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று FA மேலும் கூறியது.
முன்னதாக, வெள்ளிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நாட்டில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் என்று NCEMA கூறியது குறிப்பிடத்தக்கது.
#tamilgulf



