படித்ததில் பிடித்தது

பணக்காரர்களின் உண்மை குணம் – எளிமையில் இருக்கும் பெருமை

பணக்காரன் ஆகுவது சம்பாதிப்பதால் அல்ல… சேமிப்பதால்தான்

🌟பணக்காரர்களின் உண்மை குணம் 🌟

 

பில்கேட்ஸ் தனது 2017 ஆம் ஆண்டு “Gates Notes” வருடாந்திர கடிதத்தில் இந்த சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.

பில் கேட்ஸும் (Bill Gates), வாரன் பஃப்பட்டும் (Warren Buffett) உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதன்மையானவர்கள் மட்டுமல்ல, மிக நெருங்கிய நண்பர்களும் கூட.

ஒருமுறை இவர்கள் இருவரும் ஹாங்காங் சென்றிருந்தபோது, நடந்த சம்பவத்தை பில்கேட்ஸ் விவரிக்கிறார்.

ஹாங்காங்கில் மதிய உணவுக்கு செல்லலாம் என முடிவெடுத்தோம். மெக்டாலன்ட்ஸுக்கு போகலாம் என வாரன் பஃப்பட் சொன்னார். சரி என சொல்லி அங்கே சென்றோம்

உலகின் ஆகச்சிறந்த கோடீஸ்வரர்கள் இருவர், சாதாரணமாக ஒரு மெக்டொனால்ட்ஸில் நுழைவதே அங்கிருந்தவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. உணவு ஆர்டர் செய்து முடித்ததும், “பில்லை நான் கொடுக்கிறேன்” என்று வாரன் பஃப்பட் முன்வந்தார்.

அதன்பின் அவர் தனது பாக்கெட்டில் கைவிட்டு கிரடிட் கார்டை எடுப்பார் என்று நான் எதிர்பார்த்தேன். ஆனால் வாரன் பஃப்பட் வெளியே எடுத்தது கிரிடிட் கார்டோ அல்லது கட்டுக் கட்டான பணமோ அல்ல; மாறாக, பத்திரிகைகளில் வரும் இலவச உணவுக்கான கூப்பன்களை கத்திரித்து எடுத்து வைத்திருந்தார். அதைத் தேடி எடுத்து கவுண்டரில் கொடுத்து இலவசமாக உணவை வாங்கிவிட்டார்..

பணக்காரர்களின் உண்மை குணம் | பில் கேட்ஸ் & வாரன் பஃபெட் வாழ்க்கைப் பாடம்

“ஹாங்காங்கில் இவர் இப்படி கூப்பன்களை தேடி சேகரித்ததே எனக்கு வியப்பாக இருந்தது…”

பல்லாயிரம் கோடிகளை கொண்ட ஒருவர், ஒரு சில டாலர்களைச் சேமிக்க கூப்பன்களைப் பயன்படுத்துவது எனக்கு விந்தையாக இருந்தது. வாரன் பஃப்படிடம் இதைப்பற்றி கேட்டேன்

“ஒருவர் பணக்காரர் ஆவது அவர் எவ்வளவு சம்பாதிக்கிறார் என்பதில் இல்லை, தேவையற்ற இடங்களில் எவ்வளவு குறைவாக பணத்தை செலவு செய்கிறார் என்பதில்தான் இருக்கிறது.” என்றார்

ஆடம்பரத்தை விட எளிமையையும், வீணாக்குவதை விடச் சேமிப்பையும் மதிக்கும் குணத்தை அவரிடம் இருந்து கற்றுக்கொண்டேன்..

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button