காசாவில் பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 31,645 ஆக உயர்வு

காசா பகுதிக்குள் இஸ்ரேலின் போர் நடவடிக்கையைத் தொடர்ந்து பாலஸ்தீனியர்களின் பலி எண்ணிக்கை 31,645 ஆக உயர்ந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
“ஒரே இரவில் இஸ்ரேலின் குண்டுவீச்சில் குறைந்தது 61 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் இறப்பு எண்ணிக்கை 31,645 ஆக உயர்ந்துள்ளது” என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸ் பிடியில் உள்ள கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இஸ்ரேலிய தூதுக்குழு விரைவில் தோஹா சென்றடையும் என்று இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
ஐந்து மாதங்களுக்கும் மேலான போர் மற்றும் இஸ்ரேலிய முற்றுகை காசா பகுதியில் மோசமான மனிதாபிமான நிலைமைகளுக்கு வழிவகுத்துள்ளது. அங்கு கடலோரப் பகுதியில் 2.4 மில்லியன் மக்களுக்கு பஞ்சம் ஏற்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை பலமுறை எச்சரித்து வருகிறது.