அல் கைல் சாலையை நோக்கி செல்லும் போக்குவரத்தை எளிதாக்கும் புதிய 3 வழி பாலம் திறப்பு
ஜாபீல் அரண்மனை தெருவை ஒரு பெரிய நெடுஞ்சாலையுடன் இணைக்கும் புதிய பாலம் இப்போது நிறைவடைந்துள்ளதாக துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தெரிவித்துள்ளது.
700 மீட்டர் நீளமுள்ள மூன்று வழி ஜாபீல் அரண்மனை தெரு பாலம், இப்போது ஜாபீல் அரண்மனை தெரு மற்றும் அவுட் மேத்தா சாலையை அபுதாபியின் திசையில் அல் கைல் சாலையுடன் இணைக்கும். இந்தப் பாலம் ஒரு மணி நேரத்திற்கு 4,800 வாகனங்களைக் கையாளக்கூடியதாக இருக்கும், மேலும் பயண நேரத்தை குறைக்கும் என்று RTA தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்ட RTA -ன் அல் கைல் சாலை மேம்பாட்டு திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய பாலம் உள்ளது .
700 மில்லியன் திர்ஹம் திட்டத்தில், ஐந்து புதிய பாலங்கள் கட்டப்படும், இது நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை நீக்கும். திட்டம் முடிந்ததும் பயண நேரம் 30 சதவீதம் குறைக்கப்படும்.
Zabeel, Meydan, Al Quoz 1, Ghadeer Al Tair மற்றும் Jumeirah Village Circle உள்ளிட்ட பல இடங்களில் சாலை மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று RTA அந்த அறிவிப்பில் தெரிவித்திருந்தது.