ராசல் கைமாவில் உள்ள சில பள்ளிகளில் நாளை ஆன்லைன் வகுப்பு

ராஸ் அல் கைமா
மழை காரணமாக ராசல் கைமாவில் உள்ள சில பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலையற்ற வானிலை காரணமாக ராஸ் அல் கைமாவில் உள்ள அரசுப் பள்ளிகளின் மாணவர்கள் நவம்பர் 17 வெள்ளிக்கிழமை ஆன்லைன் மூலம் கல்வியை தொடருவார்கள். எமிரேட்டில் உள்ள உள்ளூர் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு, மாணவர்கள் நாளை வீட்டிலிருந்து கற்றுக் கொள்வார்கள் என்று கூறியுள்ளனர்.
இந்த நடவடிக்கை மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று ராஸ் அல் கைமா காவல்துறை தெரிவித்துள்ளது
முன்னதாக NCM நாட்டிற்கு 4 நாள் மழை எச்சரிக்கையை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் வெள்ளிக்கிழமை நாட்டின் கிழக்கு, வடக்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.