அமீரக செய்திகள்
ராஸ் அல் கைமாவில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு அறிவிப்பு

நிலையற்ற வானிலை நாட்டைத் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், ராஸ் அல் கைமாவில் உள்ள அரசுப் பள்ளிகள் மார்ச் 8 வெள்ளியன்று ரிமோட் லேர்னிங்கைச் செயல்படுத்துகிறது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, மார்ச் 8 வெள்ளிக்கிழமை மாலை முதல் மார்ச் 10 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வரை நாட்டில் பலத்த மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும்.மேலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படும். பலத்த காற்று வீசுவதால் சாலைகளில் பார்வைத் திறன் குறைவாக இருக்கலாம். வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் சனிக்கிழமை நள்ளிரவு வரை வானிலை மிக மோசமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவையின்றி பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க
ப்பட்டுள்ளது.
#tamilgulf