ஓமன் செய்திகள்இந்தியா செய்திகள்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு ஓமன் அமைச்சர் வாழ்த்து

மஸ்கட்: இந்தியக் குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர். S. ஜெய்சங்கருக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் சையத் பத்ர் ஹமத் அல் புசைதி தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தார்.
இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் பல்வேறு துறைகளில் தங்களுக்கு இடையிலான பொருளாதார பங்காளித்துவத்தை வலுப்படுத்துவதற்கான பொதுவான உறுதிப்பாடு குறித்து இரு அமைச்சர்களும் விவாதித்தனர்.
மேலும், இந்தியக் குடியரசின் வெளியுறவுத் துறை அமைச்சராக மீண்டும் பதவியேற்றுள்ள அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
#tamilgulf