அமீரக செய்திகள்
அபுபக்கர் அல் சித்திக் தெருவில் பராமரிப்பு பணி அறிவிப்பு

ஷார்ஜா சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம், கோர்ஃபக்கனில் உள்ள அபுபக்கர் அல் சித்திக் தெருவில் பராமரிப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் தொடங்குவதாக அறிவித்தது.
மொத்தம் 1.5 கி.மீ நீளம் கொண்ட இந்த திட்டம் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் ஆகஸ்ட் 9, வெள்ளிக்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 26 திங்கள் வரை நீடிக்கும். இரண்டாம் கட்டம் ஆகஸ்ட் 27, செவ்வாய் அன்று தொடங்கி செப்டம்பர் 18 புதன்கிழமை முடிவடையும்.
கீழே உள்ள வரைபடங்கள் பராமரிப்புக்காக மூடப்பட்ட பாதைகள் மற்றும் மாற்று சாலையைக் காட்டுகின்றன.
#tamilgulf