அமீரக செய்திகள்

ஷார்ஜாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் ரத்து

Sharjah:
ஷார்ஜாவில் இந்தப் புத்தாண்டு தினத்தன்று பட்டாசு வெடிப்பு மற்றும் கொண்டாட்டங்கள் இருக்காது என்று போலீசார் அறிவித்துள்ளனர். இது போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்த எடுக்கப்பட்ட முடிவு என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில் 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் எழுபது சதவீதம் பேர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என கூறப்படுகிறது.

ஹமாஸ் அழிக்கப்படும் வரை அமைதி இருக்காது என்று இஸ்ரேல் சமீபத்தில் கூறியதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button