அமீரக செய்திகள்
மின்னணு அமைப்புகளை மீட்டெடுப்பதாக அறிவித்த வெளியுறவு அமைச்சகம்
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சகம் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறைத் தொடர்ந்து அதன் மின்னணு அமைப்புகளை இயல்பு நிலைக்கு மீட்டெடுப்பதாகவும், சான்றிதழ் சேவைகளை வழக்கம் போல் மீண்டும் தொடங்குவதாகவும் அறிவித்துள்ளது.
உலகளாவிய தொழில்நுட்ப சிக்கல் தீர்க்கப்படும் வரை எந்தவொரு பரிவர்த்தனையையும் நடத்துவதைத் தவிர்க்குமாறு அமைச்சகம் முன்பு வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியது.
அதில், வெளியுறவு அமைச்சகத்தின் அனைத்து மின்னணு அமைப்புகளையும் பாதிக்கும் உலகளாவிய தொழில்நுட்பக் கோளாறு இருப்பதை நாங்கள் உங்களுக்குத் தெரிவிக்கிறோம்.
இந்தப் பிரச்சினை தீரும் வரை எந்தவொரு பரிவர்த்தனைகளையும் நடத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து வாடிக்கையாளர்களையும் அமைச்சகம் அறிவுறுத்தியது.
#tamilgulf