அமீரக செய்திகள்
ஜூன் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை மதிய இடைவேளை அறிவிப்பு

மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MoHRE) ஜூன் 15 முதல் செப்டம்பர் 15, 2024 வரை மதிய இடைவேளையை அமல்படுத்துகிறது.
தொடர்ந்து 20வது ஆண்டாக செயல்படுத்தப்பட்டு வரும் இந்த இடைவேளையானது, நேரடி சூரிய ஒளியின் கீழ் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் திறந்தவெளி பகுதிகளில் வேலை செய்பவர்கள் மதியம் 12:30 மணி முதல் மாலை 3:00 மணி வரை வேலை செய்வதை தடை செய்யும்.
இந்த மதிய இடைவேளையை மீறுபவர்களுக்கு 50,000 திர்ஹம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
#tamilgulf