மே 12: அன்னையர் தினம்

இந்த உலகத்தை கடவுள் படைத்தாலும், இயற்கையே படைத்தாலும் கூட அகில உலகயே ஆட்டிப் படைக்கும் அறிவுள்ள மனிதர்களைப் படைப்பது அன்னை, அன்னையர்கள் தான் நாம் கண்ணால் காணும் தெய்வ ரூபங்களாக இருக்கின்றனர்.
“அதனால் அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்” என ஔவையார் பாட்டி தனது தமிழ் நீதி நூல்களில் ஒன்றான கொன்றை வேந்தனின் அர்த்தம் பொருந்தி நமக்கு உரைத்திட எழுதி வைத்துள்ளார்.
எத்தனையோ, வெளியுலகச் சவால்களை எதிர்கொண்ட போதிலும், கருவிலேயே பல எதிர்ப்புகளைத் தாண்டி இந்தச் சமூகத்தில் பெறுமதிப்புடன் திகழ்ந்து, குடும்பத்தையும், குழந்தைகளையும், உறவினர்களையும், வேலையும், அக்கம்பக்கத்து வீட்டாரையும் பரிபக்குவதுடன் அணுகி, வீட்டுக்குள்ளும் வெளியிலும் பலவித சவால்களை சந்தித்து அதன் அனுசிரத்தையும் மேற்கொண்டு சாதனை படைத்தது வருபவர் தான் அன்னை.
ஒவ்வொரு அன்னைமார்களின் கைகளில் தான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைச் சிருஷ்டித்துக் கட்டமைக்கும் மாணவத் தூண்கள் எல்லாம் செதுக்கப்படுகிறது.
அன்னையின் வயிற்றில உலகத்தையும் உலக நடப்புகளையும் கவனிக்கத் தொடங்கும் குழந்தை அவளது வளர்ப்பில் இந்தச் சமூகத்தில் ஒருவனாகவும், மக்களின் பிரதிநிதியாகவும், மக்களால் மக்களுக்காக மக்களே ஆளும் மாபெரும் தலைவனாக உருவெடுக்கிறான்.
அன்னையின் கைகளில் ஒரு களிமண் இருந்தாலும் அது விலையேற்றப்பட்ட கலைநயப் பொருளே ஆகும் எனில் ஒரு குழந்தையை அவள் எப்படி வனைவாள் என்பதற்கு நம்மெல்லாம் சான்று.
இந்த உலகமே அன்னையின் காலடியில் தவம் கிடந்தாலும் அவளது கண்ணும் கருத்துமான கொள்கைகள் எல்லாம் மனித சமுதாயத்திற்குத் தேவையான பொறுப்புள்ள ஆளுமைகளாக தனது குழந்தைகளை உருவாக்க வேண்டும் என்றே சிந்தனை செய்வாள்.
அதனால், பெண்களின் தனித்தன்மை இனிமேலும் போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். அது மனிதத்தை உயர்த்தும் திறவுகோல் ஆகும்.
அன்னையை வாழ்த்தி வணங்கியபடி.. அன்னையின் பாதம் தொட்டு அவளது வார்த்தைகளை உள்வாங்கி அவள் சென்ற பாதையிலே நாமும் செல்வோம். ஏனென்றால் அவள் ஓட்டுமொத்த அறிவுகத்தின் ஒவ்வொரு மனிதனின் முதல் அனுபவப் பேராசிரியை அன்னை என்பதால்தான்.