அமீரக செய்திகள்
ஷார்ஜா உதிரி பாகங்கள் கிடங்கில் பெரும் தீ விபத்து

ஷார்ஜாவின் தொழில்துறை பகுதி ஒன்றில் சனிக்கிழமையன்று பாரிய தீ விபத்து ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில்துறை பகுதி 6-ல் பயன்படுத்தப்பட்ட கார் உதிரி பாகங்கள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து முதலில் பிற்பகல் 3.05 மணியளவில் தெரிவிக்கப்பட்டது என்று ஷார்ஜா சிவில் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது.
தீப்பிடித்த இடத்தில் இருந்து அடர்ந்த புகை அருகில் உள்ள நெடுஞ்சாலைகளில் மணிக்கணக்கில் பரவியது.
#tamilgulf