அமீரக செய்திகள்
ஆண்டின் மிகக் குறைந்த வெப்பநிலை UAE-ல் இன்று பதிவு

வாரயிறுதி நெருங்கிய நிலையில் குளிர்ந்த காலநிலை காரணமாக நாட்டில் இதமான வானிலை நிலவுகிறது.
ராஸ் அல் கைமாவில் உள்ள ஜெய்ஸ் மலையில் நேற்று 2.4ºC குறைந்த வெப்பநிலை பதிவானதைத் தொடர்ந்து, இன்று UAE ஆண்டின் மிகக் குறைந்த வெப்பநிலையான 2.3ºC ஐப் பதிவு செய்தது. இன்று காலை நாட்டின் மற்ற குறைந்த வெப்பநிலை முறையே ஜபல் அல் ரஹ்பா மற்றும் மெப்ரே மலையில் 4.5ºC மற்றும் 5.5ºC பதிவானது.
நாடு முழுவதும் பதிவான குறைந்த வெப்பநிலை
நேற்று, அல் ஐனில், ஆலங்கட்டி மழை பெய்தால் கார்கள் சேதப்படாமல் பாதுகாக்க மெத்தைகள், போர்வைகள் மற்றும் தரைவிரிப்புகளால் மூடப்பட்டிருந்தது. வரவிருக்கும் சீரற்ற காலநிலை காரணமாக தங்கள் வாகனங்களை பாதுகாக்குமாறு அதிகாரிகளால் வியாழக்கிழமை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து இவ்வாறு செய்யப்பட்டது.
#tamilgulf