அமீரக செய்திகள்
லேசானது முதல் மிதமான மழை பெய்யும்

நாட்டின் தெற்குப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என NCM மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
NCM-ன் முன்னறிவிப்பில், இன்று வானிலை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, சில பகுதிகளில் மிதமான மேகங்கள் தொடர்ந்து தென்படும், லேசான மழைக்கு வாய்ப்பும் உள்ளது.
அரேபிய வளைகுடா பகுதியில் கடல் அலை சற்று குறைவாகவும், ஓமன் கடலில் சிறிது முதல் மிதமாகவும் இருக்கும்.
நாட்டின் மலைப்பகுதிகளில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 11ºC ஆகவும், உள் பகுதிகளில் அதிகபட்சமாக 35ºC ஆகவும் இருக்கும்.
#tamilgulf