Kuwait: விசாக் காலம் கடந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம்

Kuwait:
டிசம்பர் 19 செவ்வாய்க் கிழமை நாடாளுமன்ற விவாதத்திற்காக அமைக்கப்பட்டுள்ள புதிய குடியிருப்பு சட்டத்தின் கீழ், வருகை விசாவைக் காலம் கடந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களுக்கு கடுமையான அபராதங்களை விதிக்க குவைத் திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சட்டத்தை மீறி, நாட்டில் தொடர்ந்து இருப்பவர்களுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 2,000 குவைத் தினார் (ரூ. 5,38,226) வரை அபராதமும் விதிக்கப்படும் என்று வரைவுச் சட்டம் பரிந்துரைக்கிறது.
முதல் மாதத்தில் 2 குவைத் தினார்களும் (ரூ. 538), மீறப்பட்ட இரண்டாவது மாதத்தில் 4 குவைத் தினார்களும் (ரூ. 1,076) விதிக்கப்படும் என்றும் வரைவுச் சட்டம் கூறுகிறது.
விசிட் விசாவில் குவைத்துக்குள் நுழையும் வெளிநாட்டவர்கள் மூன்று மாதங்கள் வரை தங்குவதற்கு வரைவு அனுமதிக்கிறது. அவர்கள் உள்துறை அமைச்சகத்திடம் இருந்து குடியிருப்பு அனுமதியைப் பெறுகிறார்கள்.
குடியிருப்புச் சட்டத்தை மீறி பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு 3,000 குவைத் தினார் (ரூ. 807,340) அபராதம் விதிக்க வரைவு சட்டம் முன்மொழிகிறது.
குவைத் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதை தடுக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டுள்ளது. டிசம்பர் 15, வெள்ளிக்கிழமை, குடியுரிமை மற்றும் தொழிலாளர் சட்ட மீறல்கள் மீதான பாதுகாப்பு நடவடிக்கையில் 209 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக குவைத் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்தின் மொத்த மக்கள் தொகையான 4.6 மில்லியனில் 3.2 மில்லியன் பேர் வெளிநாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.



