காசா பகுதியில் மொத்த இறப்பு எண்ணிக்கை 31,045 ஆக உயர்வு
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் எண்ணிக்கை 31,000ஐ தாண்டியுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், இஸ்ரேலிய இராணுவம் 85 பாலஸ்தீனியர்களைக் கொன்றது மற்றும் 130 பேரைக் காயப்படுத்தியது, இதன்மூலம் மொத்த இறப்பு எண்ணிக்கை 31,045 ஆகவும், காயம் 72,654 ஆகவும் உயர்ந்துள்ளது என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குண்டுவீச்சு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பற்றாக்குறை ஆகியவற்றிற்கு மத்தியில் பாதிக்கப்பட்ட சிலர் இடிபாடுகளுக்குள் இருப்பதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று தெற்கு இஸ்ரேலிய எல்லை வழியாக ஹமாஸ் குழு நடத்திய வெறித்தன தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க காசா பகுதியில் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் பெரிய அளவிலான தாக்குதலை நடத்தி வருகிறது.