இந்தியா செய்திகள்

India: 2024 மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை

India
உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு அரசு தடை விதித்துள்ளது.

தேசிய தலைநகரில் உள்ள உள்ளூர் விற்பனையாளர்கள் வெங்காயத்தை கிலோ ஒன்றுக்கு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்கின்றனர்.

முன்னதாக, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் சில்லறை சந்தைகளில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு மானிய விலையில் வழங்கி விற்பனையை அதிகரிக்க மத்திய அரசு அக்டோபர் மாதம் முடிவு செய்தது.

விலைவாசியை கட்டுப்படுத்த, அரசு ஏற்கனவே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அக்டோபர் 28 முதல் டிசம்பர் 31 வரை வெங்காய ஏற்றுமதியில் டன்னுக்கு 800 அமெரிக்க டாலர் குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை (MEP) விதித்திருந்தது.

ஆகஸ்ட் மாதம், டிசம்பர் 31 வரை வெங்காயத்திற்கு 40 சதவீத ஏற்றுமதி வரியை இந்தியா விதித்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், வெங்காய ஏற்றுமதி மற்ற நாடுகளின் கோரிக்கை அடிப்படையில் அரசாங்கத்தால் அனுமதிக்கப்படும் என்றும் டிஜிஎஃப்டி தெரிவித்துள்ளது.

இந்த நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் ஆகஸ்ட் 4 வரை நாட்டிலிருந்து 9.75 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button