COP28 பசுமை மண்டலத்திற்கான பாஸை பெறுவது எப்படி? எப்போது திறக்கப்படும்?

COP28 மாநாடு எக்ஸ்போ சிட்டி துபாயில் வரும் நவம்பர் 30-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் காலநிலை நடவடிக்கை பற்றி அறிய ஆர்வமுள்ள பொதுமக்கள் டிசம்பர் 3 முதல் 12 வரை எக்ஸ்போ சிட்டி துபாயில் COP28ஐ பார்வையிடலாம். இதற்கான இலவச பசுமை மண்டல நாள் பாஸை இப்போதே முன்பதிவு செய்யலாம். பாஸை பெற http://cop28.com/tickets என்ற லிங்கில் சென்று பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
பார்வையாளர்கள் தங்கள் வருகையை உறுதிசெய்யவும், அனைத்து நிகழ்வுகளையும் தவறவிடாமல் பார்க்க விரிவான பசுமை மண்டல தள வரைபடம் இணையதளத்தில் உள்ளது.
ஒவ்வொரு டிக்கெட்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாளுக்கு மட்டுமே செல்லுபடியாகும், அந்த தேதியில் மட்டுமே உள்ளே செல்ல அனுமதிக்கும். டிக்கெட்டையும் ஒருமுறை மட்டுமே ஸ்கேன் செய்ய முடியும், எனவே அதை பல பதிவுகளுக்குப் பயன்படுத்த முடியாது. COP28 -ன் பசுமை மண்டலத்திற்கு பயணிக்க, துபாய் மெட்ரோவை பயன்படுத்த பார்வையாளர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பசுமை மண்டலம் COP28 பிரசிடென்சியால் நிர்வகிக்கப்பட்டு வழங்கப்படுகிறது மற்றும் நீல மண்டலத்துடன் அதிக ஈடுபாடு மற்றும் தொடர்புகளை அனுமதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீல மண்டலம் என்பது UNFCCC-யால் நிர்வகிக்கப்படும் தளமாகும், இது அங்கீகாரம் பெற்ற கட்சிகள் மற்றும் பார்வையாளர் பிரதிநிதிகளுக்கு மட்டுமே திறக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 30 முதல் டிசம்பர் 2 வரை, COP28 இன் முதல் மூன்று நாட்களுக்கு பசுமை மண்டலத்திற்கான டிக்கெட்டுகள் கிடைக்காது. பசுமை மண்டலத்தின் அதிகாரப்பூர்வ திறப்பு நேரம் 10:00-18:00 ஆகும், சில நிகழ்வுகள் மாலை நேரங்களில் 18:00 முதல் 22:00 வரை நடைபெறும்.