நாட்டின் சில பகுதிகளில் புதன் இரவு முதல் வியாழன் அதிகாலை வரை கனமழை
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் சில பகுதிகளில் புதன் இரவு முதல் வியாழன் அதிகாலை வரை கனமழை பெய்து வருகிறது, இதன் விளைவாக வாடிகள் நிரம்பி வழிகின்றன. வானிலைத் துறையின் அறிவிப்புப்படி, துபாய், அபுதாபி, ஷார்ஜா மற்றும் புஜைராவின் சில பகுதிகளிலும் தீவிரத்துடன் மழை பெய்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் பேரிடர் மேலாண்மைக் குழு (NCEMA) பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், பாதுகாப்புத் தேவைகளைப் பின்பற்றவும், குறிப்பாக கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும் பகுதிகளில் தங்கள் வாகனங்களைப் பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும் வலியுறுத்தியது. நீர்நிலைகள் மற்றும் வெள்ளம் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பாக இருக்கவும், மலைகள் போன்ற கரடுமுரடான பகுதிகளைத் தவிர்க்கவும் பொதுமக்களை கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அபுதாபி காவல்துறை அல் ஐனுக்கு ஆலங்கட்டி மழை எச்சரிக்கையை விடுத்துள்ளது மற்றும் அபுதாபியின் சில பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்யும் என்று கணித்துள்ளது. பாதகமான காலநிலையின் போது வாகன ஓட்டுனர்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.