ஜி.வி.பிரகாஷின் புதிய படம், போஸ்டர் வெளியீடு.

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி. பிரகாஷ், குமார் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் ‘அடியே'. இதில் நாயகியாக கவுரி கிஷன் மற்றும் வெங்கட்பிரபு, மதும்கேஷ், விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை விக்னேஷ் கார்த்திக் டைரக்டு செய்கிறார்.இவர்திட்டம் இரண்டு’ படத்தை டைரக்டு செய்தவர். பிரபா பிரேம் குமார் தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு: கோகுல் பினோய். இசை: ஜஸ்டின் பிரபாகர்.
படம் பற்றி டைரக்டர் விக்னேஷ் கார்த்திக் கூறும்போது, `தமிழில் ஏராளமான அறிவியல் புனைவு கதைகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் அறிவியல் புனைவு சார்ந்த கதைக்களத்துடன் மல்ட்டி வெர்ஸ் தொழில்நுட்ப பின்னணியில் காதலை சொல்வதில்அடியே’ திரைப்படம் முதல் படைப்பாக இருக்கும். இத்திரைப்படத்தின் ஒரு நிமிடத்திற்கு மேலான மோஷன் போஸ்டர் வெளியிடப் படுகிறது. இதில் நகைச்சுவை கலாட்டாக்கள் புதிய தொழில் நுட்ப பின்னணியில் விவரிக்கப்பட்டு உள்ளது. இறுதியில் படத்தின் முதல் தோற்றம் வித்தியாசமாக தோன்றுவது ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை அளிக்கும்” என்றார்.



