நிலையற்ற வானிலை காரணமாக தொலைதூரக் கல்வியை அறிவித்த அரசுப் பள்ளிகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிலவும் நிலையற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் தொலைதூரக் கல்வியை அறிவித்தது .
நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம், ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தாக்கிய வரலாற்றுப் புயல் காரணமாக ஏப்ரல் 16 அன்று பள்ளிகள் ஆன்லைன் கற்றலுக்கு மாறியது. இந்த நேரத்தில் தனியார் பள்ளிகளும் தொலைதூரக் கல்வியைக் கடைப்பிடித்தன. சீரற்ற காலநிலையின் பின் விளைவுகள் காரணமாக, இந்த நடவடிக்கை சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
தேசிய அவசரகால நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் , நிலையற்ற வானிலைக்கு தயார்நிலையில் இருப்பதாக திங்கள்கிழமை அறிவித்தது. கூட்டங்களின் போது, அதிகாரிகள் இந்த நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் தயார்நிலை குறித்தும் விவாதித்தனர்.