பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவுக்கு UAE-ன் கோல்டன் விசா

பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா ஐக்கிய அரபு எமிரேட்ஸின் 10 ஆண்டு கோல்டன் விசாவால் கௌரவிக்கப்பட்டுள்ள சமீபத்திய இந்தியப் பிரபலம் ஆவார்.
37 வயதான நடிகைக்கு எமிரேட்ஸ் ஃபர்ஸ்ட் குரூப்பின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜமாத் உஸ்மான் விசாவை வழங்கினார்.
இன்ஸ்டாகிராமில் , சோனாக்ஷி கோல்டன் விசா பெறும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள உஸ்மான், “கலை மற்றும் கலாச்சாரத்திற்கான அவரது பங்களிப்பைக் கொண்டாடும் வகையில், மதிப்புமிக்க கோல்டன் விசாவை சோனாக்ஷி சின்ஹாவுக்கு வழங்கியதில் பெருமை அடைகிறேன . கோல்டன் விசா குடும்பத்திற்கு வருக!” என்று பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கோல்டன் விசா வழங்கப்பட்ட முக்கிய இந்திய பிரபலங்களின் நீண்ட பட்டியலில் சோனாக்ஷியும் இணைந்துள்ளார்.
இந்தப் பட்டியலில் சல்மான் கான், ஷாருக்கான், வருண் தவான், ரன்வீர் சிங், ஃபர்ஹா கான், சஞ்சய் தத் , மோகன்லால், மம்முட்டி, சுனில் ஷெட்டி, பிருத்விராஜ் சுகுமாரன், சோனு நிகம், சோனு சூட் , சஞ்சய் கபூர் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
UAE கோல்டன் விசா என்றால் என்ன?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ‘கோல்டன் விசா’ என்பது நீண்ட கால குடியிருப்பு விசா ஆகும், இது வெளிநாட்டு திறமையாளர்கள் நாட்டில் வசிக்க, வேலை செய்ய அல்லது படிக்க அனுமதிக்கிறது.