அமீரக செய்திகள்
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கம் விலை உயர்வு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஒரு கிராம் தங்கத்தின் விலை திங்கட்கிழமை 2 திர்ஹம்கள் குறைந்த பின்னர் செவ்வாய்கிழமை சந்தையின் தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது.
துபாய் ஜூவல்லரி குழுமத் தரவுகளின் படி, திங்கட்கிழமை ஒரு கிராம் Dh244.0 ஆக இருந்த நிலையில், செவ்வாய்க் கிழமை காலை 24K ஒரு கிராம் Dh245.25 ஆக வர்த்தகம் செய்யப்பட்டது.
தங்கத்தின் மற்ற வகைகளும் விலை அதிகரித்து காணப்பட்டது. 22K ஒரு கிராமுக்கு Dh227.0 ஆகவும், 21K Dh219.75 ஆகவும், 18K Dh188.5 ஆகவும் வர்த்தகம் செய்யப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நேரப்படி காலை 9.35 மணியளவில் ஸ்பாட் தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 15 சதவீதம் உயர்ந்து $2,028.25 ஆக இருந்தது.
#tamilgulf