அடுத்த சீசனில் சேர விரும்பும் கடை உரிமையாளர்களுக்கான பதிவை அறிவித்த குளோபல் வில்லேஜ்
குளோபல் வில்லேஜில் கடை அமைக்க நினைக்கிறீர்களா? அடுத்த சீசனுக்கு பதிவு செய்ய அறிவிக்கப்ட்டுள்ளது. வணிகர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில்முனைவோரை ஆன்லைன் வணிக போர்டல் மூலம் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்யலாம்.
குளோபல் வில்லேஜ் ஒவ்வொரு குளிர்காலத்திலும் திறக்கப்படும். முந்தய சீசன் அக்டோபர் 18 முதல் மே 8 வரை இயங்கியது. இந்த ஆண்டு அதன் அடுத்த சீசனுக்கான தேதிகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
வகைகள் மற்றும் முன்மொழிவு சமர்ப்பிக்கும் தேதிகள்:
1. திறந்த சந்தைகள்: மே 31 முதல் ஜூன் 14 வரை.
2. உணவகங்கள் மற்றும் காபி கடைகள்: ஜூன் 25 முதல் ஜூலை 10 வரை.
3. கியோஸ்க்குகள் மற்றும் தள்ளுவண்டிகள்: ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 2 வரை.
4. விருந்தினர் சேவைகள்: ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 1 வரை.
5. சில்லறை விற்பனை கடைகள்: ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 11 வரை.
சீசன் 29ல் பதிவு செய்வதன் மூலம், வணிகங்கள் மற்றும் தொழில்முனைவோர் பலதரப்பட்ட பின்னணியில் இருந்து மில்லியன் கணக்கான பார்வையாளர்களை வெளிப்படுத்துகிறார்கள். அதே நேரத்தில், புதுமைகளை ஊக்குவிக்கும் மற்றும் ஒத்துழைப்பை வளர்க்கும் ஆதரவான சுற்றுச்சூழல் அமைப்பிலிருந்து பயனடைவார்கள்.
ஆர்வமுள்ளவர்கள் குளோபல் வில்லேஜ் வணிக போர்டல் மூலம் அனைத்து வகைகளிலும் தங்கள் ஆர்வத்தை பதிவு செய்யலாம்: https://business.globalvillage.ae/en/partner-categories