பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,285 ஆக உயர்வு

Gaza:
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 24,285 ஆக உயர்ந்துள்ளதாக காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் ராணுவம் 158 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகவும், 320 பேர் காயமடைந்ததாகவும் செய்தி நிறுவனம் ஒன்று செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7, 2023 முதல் தற்போது வரை நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் 61,154 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், ஏராளமான பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் இருப்பதாகவும், ஆம்புலன்ஸ் மற்றும் சிவில் பாதுகாப்புக் குழுவினரால் அவர்களை அடைய முடியவில்லை என்றும் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எதிர்கொள்ளும் கடுமையான உடல்நல சிக்கல்கள் குறித்தும் அமைச்சகம் எச்சரித்துள்ளது, அவர்களில் 350,000 பேர் மருந்துகளின்றி உள்ளனர். எனவே, நாள்பட்ட நோயாளிகளுக்கு அவசரமாக மருந்துகளை வழங்க சர்வதேச நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.