உலக செய்திகள்
இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்: பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 23,000 தாண்டியது

Gaza:
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பலஸ்தீனர்களின் பலி எண்ணிக்கை 23,000ஐ தாண்டியுள்ளதாக காசாவை தளமாகக் கொண்ட சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய ராணுவம் 249 பாலஸ்தீனியர்களைக் கொன்றதாகவும், 510 பேர் காயமடைந்ததாகவும் அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்ததாக செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
அக்டோபர் 7, 2023 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் வெடித்ததில் இருந்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 23,084 ஆகவும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 58,926 ஆகவும் உள்ளது என்று செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
#tamilgulf