அமீரக செய்திகள்
ஷார்ஜாவில் உள்ள நான்கு செயற்கை மலர்க் கிடங்குகளில் தீ விபத்து
ஷார்ஜாவில் உள்ள நான்கு செயற்கை மலர்க் கிடங்குகளில் ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டதாக ஷார்ஜா சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தீயை வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் காலை 7.50 மணியளவில் நகரின் தொழில்துறை பகுதி 17-ல் உள்ள நான்கு செயற்கை மலர் கிடங்குகளில் தீப்பற்றியதாக டிஃபென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, நான்கு நிமிடங்களில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
சில நிமிடங்களில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது, அதன் பிறகு குளிரூட்டும் செயல்முறை தொடங்கியது மற்றும் தீக்கான காரணத்தை கண்டறிய தகுதிவாய்ந்த அதிகாரிகளிடம் தளம் ஒப்படைக்கப்பட்டது.
#tamilgulf