உரிமம் இல்லாமல் நன்கொடை வசூலித்தால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை
உரிமம் இல்லாமல் நன்கொடை வசூலிக்கக் கூடாது என அரசு தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடக கணக்குகளில் வெளியிடப்பட்ட ஒரு விழிப்புணர்வு வீடியோவில், வதந்திகள் மற்றும் சைபர் கிரைம்களை எதிர்த்துப் போராடுவது குறித்த ஃபெடரல் ஆணை-சட்ட எண் (34) 2021-ன் பிரிவு 46ஐ பொது வழக்குரைஞர் முன்னிலைப்படுத்தினார்.
தகுதிவாய்ந்த அதிகாரத்தால் வழங்கப்பட்ட உரிமம் இல்லாமல் நன்கொடை சேகரிப்பை ஊக்குவிப்பதற்காக இணையத்தளத்தை நிறுவும், நிர்வகிக்கும் அல்லது இயக்கும் மற்றும் ஆன்லைனில் அல்லது ஏதேனும் தகவல் தொழில்நுட்பம் மூலம் தகவல்களை வெளியிடும் எந்தவொரு நபருக்கும் சிறைத்தண்டனை மற்றும் AED200,000க்கும் குறையாத மற்றும் AED500,000க்கு மிகாத அபராதம் அல்லது இந்த இரண்டு தண்டனைகளில் ஒன்று விதிக்கப்படும் பதிவில் கூறப்பட்டுள்ளது.