ஷார்ஜாவில் தொலை தூரக் கல்வி முறை நீட்டிப்பு

ஷார்ஜாவின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக் குழு, எமிரேட்டில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான தொலை தூரக் கல்வி முறையை ஏப்ரல் 22 திங்கள்கிழமை வரை நீட்டித்துள்ளது.
ஏப்ரல் 16 அன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸைப் பாதித்த கடுமையான வானிலைக்குப் பிறகு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பெறுவதற்கு பள்ளிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் தயார் நிலையை உறுதி செய்வதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அனைத்து துபாய் தனியார் பள்ளிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நர்சரிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சமீபத்திய கடுமையான வானிலைக்குப் பிறகு, தளவாட சவால்களை எதிர் கொள்ளும் மாணவர்களுக்கு தொலைதூரக் கல்வியைத் தொடர வலியுறுத்தப்பட்டது .
இதற்கிடையில், துபாயில் உள்ள சில பள்ளிகள் திங்கள்கிழமை முதல் பள்ளியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாவலர்களுக்கு அறிவித்துள்ளன.