அமீரக செய்திகள்
தனியார் துறையில் 3 வருட அனுபவமுள்ள எமிரேட்டியர்களுக்கு மத்திய அரசு வேலைகளில் முன்னுரிமை
தனியார் துறை நிறுவனங்களில் குறைந்தபட்சம் மூன்று வருட அனுபவமுள்ள எமிரேட்டி விண்ணப்பதாரர்களுக்கு மத்திய அரசு வேலைகளில் முன்னுரிமை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“மத்திய அரசாங்கத்திற்கு ஒரு பணியாளரை நியமிக்கும் போது தனியார் துறையில் அனுபவம் (தேவைகள்) ஒன்றாக சேர்க்கப்படும்” என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சரவை கூறியது.
அரசாங்கத் துறைகளுக்குள் வழங்கப்படும் சேவைகளை அதிகரிக்க தனியார் துறையின் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துவதே இந்த முடிவின் நோக்கமாகும்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எமிரேட்டியர்களை தனியார் துறையில் வேலை செய்ய ஊக்குவித்து வருகிறது. இரு துறைகளும் வழங்கும் சலுகைகளுக்கு இடையேயான பிளவு குறைந்து வருவதால், பல எமிராட்டிகள் தனியார் நிறுவனங்களுக்கு மாறியுள்ளனர்.
#tamilgulf