ஜெர்மனியில் வேலைநிறுத்தம் காரணமாக துபாயின் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து
ஊதிய உயர்வு, அதிக செயல்திறன் சார்ந்த போனஸ், கூடுதல் நேரத்திற்கான சிறந்த ஊதியம் உள்ளிட்ட நிதி நன்மைகளை மேம்படுத்த கோரி வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
வியாழன் அன்று விமான ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக ஜெர்மனியில் இருந்து செல்லும் விமானங்கள் பாதிக்கப்படும் என்று எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியது.
ஹாம்பர்க்கிலிருந்து துபாய் செல்லும் EK060 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், ஹம்பர்க்கில் இருந்து துபாய்க்கு செல்லும் EK062 விமானம் தாமதமாக, மார்ச் 15 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி 05:30 க்கு ஹாம்பர்க்கிலிருந்து புறப்படுவதாகவும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மன் தொழிற்சங்கமான Verdi, மார்ச் 14, வியாழன் அன்று ஐந்து ஜெர்மன் விமான நிலையங்களில் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. ஊதிய உயர்வு, அதிக செயல்திறன் சார்ந்த போனஸ் மற்றும் கூடுதல் நேரத்திற்கான சிறந்த ஊதியம் உட்பட அதன் உறுப்பினர்களுக்கான நிதி நன்மைகளை மேம்படுத்தக் கோரி வேலைநிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்துள்ளது .
“இந்த வேலைநிறுத்தம் காரணமாக ஏற்படும் சிரமத்திற்கு வருந்துகிறோம். முன்பதிவு செய்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் மாற்று பயண ஏற்பாடுகளுக்கு பயண முகவர்களை தொடர்பு கொள்ள வேண்டும். முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள், தங்கள் உள்ளூர் அலுவலகத்தில் மீண்டும் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்,” என்று விமான நிறுவனம் தனது இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.