அமீரக செய்திகள்

துபாயின் டாக்ஸி துறையில் 6 மாதங்களில் 55.7 மில்லியன் சவாரிகளை பதிவு

துபாயின் டாக்ஸி துறை கடந்த ஆண்டு இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 2024-ன் முதல் ஆறு மாதங்களில் சுமார் 400,000 பயணங்கள் அதிகரித்துள்ளதாக சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்தது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரை 55.7 மில்லியன் பயணங்கள் செய்யப்பட்டுள்ளன, 2023-ல் 55.3 மில்லியன் பயணங்கள் செய்யப்பட்டன. பயணிகளின் எண்ணிக்கையும் 2024-ல் 96.2 மில்லியனில் இருந்து 96.9 மில்லியனாக அதிகரித்துள்ளது என்று RTA தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 26,000 ஆக இருந்த டாக்ஸி ஓட்டுநர்களின் எண்ணிக்கை தற்போது 30,000 ஆக அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இயக்கப்பட்ட மொத்த டாக்சிகளின் எண்ணிக்கை 12,778 ஐ எட்டியுள்ளது, இது 2023 ஆம் ஆண்டின் இதே காலத்தை விட 644 அதிகமாகும்.

ஆர்டிஏவின் பொதுப் போக்குவரத்து ஏஜென்சியின் திட்டமிடல் மற்றும் வணிக மேம்பாட்டு இயக்குநர் அடெல் ஷக்ரி கூறியதாவது:- “ஹாலா டாக்ஸியின் இ-ஹெய்ல் சேவை மூலம் டாக்ஸி துறை சாதனை வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்த ஆண்டின் முதல் பாதியில் துபாயில் நடந்த மொத்த டாக்ஸி பயணங்களின் எண்ணிக்கையில் 40 சதவிகிதம் ஈ-புக்கிங் ஆகும், இது 2023 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது ஐந்து சதவிகிதம் அதிகமாகும் ”என்று அவர் கூறினார்.

#tamilgulf

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button