Dubai: காயமடைந்த எமிராட்டி தம்பதிகளிடம் நலம் விசாரித்த ஷேக் ஹம்தான்

Dubai:
துபாயின் பட்டத்து இளவரசரும், துபாய் நிர்வாக சபையின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம், வியாழக்கிழமை செக் குடியரசின் ப்ராக் நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த உம் அல் குவைன் நகராட்சியின் டைரக்டர் ஜெனரல் அஹ்மத் இப்ராஹிம் அல் நஜ்ஜார் மற்றும் அவரது மனைவி ரௌதா அல் மெஹ்ரிசி ஆகியோரின் நலம் குறித்து விசாரித்தார்.
காயமடைந்த தம்பதியுடனான தொலைபேசி அழைப்பின் போது, ஷேக் ஹம்தான் அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழங்கபடும் என்றும், ஐக்கிய அரபு எமிரேட் குடிமக்களுக்கு உதவவும் அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தவும் அர்ப்பணிக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
ஷேக் ஹம்தான், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முழு ஆதரவை வழங்கவும், காயமடைந்த தம்பதியருக்கு சிறந்த சிகிச்சை அளிக்கவும் அறிவுறுத்தினார், அதே நேரத்தில் அவர்கள் விரைவாக குணமடையவும், சிறந்த ஆரோக்கியத்துடன் பாதுகாப்பாக வீடு திரும்பவும் தனது இதயப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
செக் தலைநகர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



