அமீரக செய்திகள்
Dubai: தண்ணீர் தேங்கியுள்ளதால் முக்கிய நெடுஞ்சாலை பகுதியளவு மூடல்

Dubai:
துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் எமிரேட்டில் தண்ணீர் தேங்கியுள்ளதால் பெரிய சாலை ஒன்றை மூடுவதாக அறிவித்தது.
எமிரேட்ஸ் சாலையில் உள்ள எக்ஸ்போ சாலை மற்றும் அல் ஃபயா ட்ரக் சாலைக்கு இடையே இரு திசைகளிலும் மூடப்பட்டுள்ளது.
துபாய் நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் மாற்றுப் பாதையாக ஷேக் முகமது பின் சயீத் சாலையைப் பயன்படுத்தலாம். அபுதாபி நோக்கி செல்பவர்கள் மாற்றுப் பாதையாக எக்ஸ்போ சாலையைப் பயன்படுத்தலாம்.
துபாய் காவல்துறையும் வாகன ஓட்டிகளுக்கு நிலைமையை எச்சரித்துள்ளது. RTA -ன் அவசரக் குழு தற்போது சீரான போக்குவரத்தை மீட்டெடுக்க நீர் திரட்சியைக் கையாண்டுவருகிறது.
#tamilgulf