குடியேற்ற நடைமுறைகளில் குழந்தைகளுக்கு உதவ புதிய கால் சென்டர் சேவை அறிமுகம்

Dubai:
இளைய தலைமுறையினரைச் சென்றடையும் வகையில், துபாயில் உள்ள குடியுரிமை மற்றும் வெளிநாட்டு விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) குடியேற்ற நடைமுறைகள் தொடர்பான தகவல்களை குழந்தைகளுக்கு தெரியப்படுத்தும் வகையில் புதிய கால் சென்டர் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
GDRFA -ன் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் முகமது அஹ்மத் அல் மர்ரி, GDRFA-ன் இன்னோவேஷன் சென்டரில் 24/7 இயங்கும் கால் சென்டரைக் கொண்டிருக்கும் இந்த சேவையை தொடங்குவதாக அறிவித்தார்.
துபாயின் விமான நிலைய முனையங்களில் உள்ள குழந்தைகளுக்கான பாஸ்போர்ட் கட்டுப்பாட்டு கவுண்டர்களின் விரிவாக்கமே இந்த புதிய சேவையாகும். இளம் பயணிகளின் பயண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில், GDRFA-ன் சேவைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த கவுண்டர்கள் உதவும்.
“பல்வேறு சேவைகளைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள பல குழந்தைகளிடமிருந்து எங்களுக்கு அழைப்புகள் வருவதையும் நாங்கள் குறிப்பிட்டோம். எனவே, எங்கள் கால் சென்டர் மூலம் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக ஒரு லைனை அர்ப்பணிக்க முடிவு செய்தோம்,” என்று லெப்டினன்ட் ஜெனரல் அல் மரி கூறினார்.
குழந்தைகள் எப்படி அழைக்கலாம்?
அமர் அழைப்பு மையத்தின் இலவச எண் 8005111 (யுஏஇக்குள்) மற்றும் +97143139999 (யுஏஇக்கு வெளியில் இருந்து). எண் 3 (ஆங்கில மொழியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு) மற்றும் எண் 4 (அரபியைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு) அழுத்துவதன் மூலம் குழந்தைகள் சேவையை அணுகலாம்.
வாடிக்கையாளர் மகிழ்ச்சித் துறையின் இயக்குனர் லெப்டினன்ட் கர்னல் சேலம் முகமது அலி சுல்தான் பின் அலி கூறுகையில், “இன்றைய குழந்தைகள் பழைய தலைமுறையினரிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள். இன்றைய குழந்தைகளுக்கு அதிக யோசனைகளும் அறிவும் இருப்பதாக நாங்கள் நம்புகிறோம். அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுக்க வேண்டும். தங்களின் யோசனைகளையும் ஆலோசனைகளையும் வரவேற்க விரும்புகிறோம். அவர்களின் யோசனைகள் சிறியதாக இருந்தாலும் அவற்றை எடுத்துக்கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ” என்றார்.