தாய்மார்களை ஆதரிப்பதற்காக நிதி நிறுவ அழைப்பு விடுத்த துபாய் கோடீஸ்வரர்

துபாய் கோடீஸ்வரர் ஒருவர், வருங்கால சந்ததியினரை வளர்ப்பதில் தாய்மார்களின் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தாய்மார்களுக்கு ஆதரவளிக்க ஒரு நிதியை நிறுவ பரிந்துரைத்துள்ளார்.
அல் ஹப்தூர் குழுமத்தின் நிறுவனத் தலைவர் கலாஃப் அஹ்மத் அல் ஹப்தூர், இந்த நிதிக்கு 100 மில்லியன் திர்ஹம் வரை பங்களிப்பதாக தெரிவித்தார்.
“ஒரு தாய் குடும்பத்தில் மிக முக்கியமான நபர் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசாங்கம் தாய்மார்களின் தேவைகளை ஆதரிக்க பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தாய்மார்களை ஆதரிப்பதற்கு நான் 25 மில்லியன் திர்ஹம் முதல் 100 மில்லியன் திர்ஹம் வரை பங்களிக்க முடியும்,” என்று அல் ஹப்தூர் தனது நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ‘கலஃப் அல் ஹப்தூருடன் திறந்த பேச்சு’ நிகழ்ச்சியில் கூறினார்.
தாய்மார்கள் குழந்தைகளை மிகவும் இளமையாக இருக்கும் போதே கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இரண்டு பெற்றோர்களும், குழந்தைகளை வளர்ப்பதில் முக்கியமானவர்கள். மேலும் இந்த நவீன சகாப்தம் கொண்டு வரும் ஆபத்துகளிலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
துபாயில் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் அறநிலையச் செயல்பாடுகள் துறையின் கிராண்ட் முஃப்தி டாக்டர் அஹ்மத் பின் அப்துல்அஜிஸ் அல் ஹடாத் ஓபன் டாக்கில் பேசுகையில், “பெரிய மனிதர்கள் சிறந்த பெண்களால் வளர்க்கப்படுகிறார்கள்” என்றார்.