அமீரக செய்திகள்
ஷேக் சயீத் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப்பாதை அறிவிப்பு

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாயன்று ஷேக் சயீத் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் சாலை மாற்றுப்பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தது.
ஜெபல் அலி பகுதியில் ஷேக் சயீத் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதால் மாற்றுப்பாதை அறிவிக்கப்பட்டுள்ளதாக RTA தெரிவித்துள்ளது.
தாமதத்தைத் தவிர்க்க, உங்கள் இலக்குகளை அடைய பின்வரும் மாற்று வழிகளைப் பயன்படுத்தவும்:
அபுதாபி நோக்கி செல்பவர்களுக்கு ஷேக் முகமது பின் சயீத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலை
அபுதாபியிலிருந்து வருபவர்களுக்கு ஷேக் முகமது பின் சயீத் சாலை மற்றும் எமிரேட்ஸ் சாலையை நோக்கி ஷைஹ் ஷுஐப் தெரு வழியாக செல்ல கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.
சுமூகமான போக்குவரத்தை மீட்டெடுக்க RTA குழுக்கள் நிலைமையை கையாண்டு வருகின்றன.
#tamilgulf