அமீரக செய்திகள்
இளவரசர் முகமது பின் பத்ரின் மறைவு:UAE தலைவர்கள் சவுதி மன்னருக்கு இரங்கல் தெரிவித்தனர்

UAE:
இளவரசர் முகமது பின் பத்ர் பின் ஃபஹ்த் பின் சாத் அல் அவல் அல் அப்துர்ரஹ்மான் அல் சவுதின் மறைவுக்கு ஐக்கிய அரபு அமீரக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் சவுதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்லாஜிஸ் அல் சவுத் அவர்களுக்கு ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இரங்கல் செய்தி அனுப்பியுள்ளார்.
துபாயின் துணைத் தலைவரும், பிரதமரும், ஆட்சியாளருமான ஹிஸ் ஹைனஸ் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் மற்றும் துணைத் தலைவர், துணைப் பிரதமர் மற்றும் ஜனாதிபதி நீதிமன்றத்தின் தலைவர் ஷேக் மன்சூர் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரும் இதே போன்ற இரங்கல் செய்திகளை சவுதி மன்னருக்கு அனுப்பியுள்ளனர்.
#tamilgulf