அமீரக செய்திகள்
நகராட்சி அபராதத் தொகையில் 52 சதவீதம் தள்ளுபடி அறிவித்த அஜ்மான் பட்டத்து இளவரசர்

Ajman
அஜ்மானின் பட்டத்து இளவரசரும், நிர்வாகக் குழுவின் தலைவருமான ஷேக் அம்மார் அல் நுஐமி 52வது யூனியன் தினத்தை முன்னிட்டு நகராட்சி அபராதத் தொகையில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
பட்டத்து இளவரசரின் வழிகாட்டுதலின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தின் 52வது யூனியன் தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, அபராதத் தொகையில் 52 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2, 2023 முதல் ஜனவரி 22, 2024 வரை 52 நாட்களுக்குள் பணம் செலுத்தினால் தள்ளுபடி பெறலாம் என்று அஜ்மான் நகராட்சி அறிவித்துள்ளது. டிசம்பர் 2, 2023க்கு முன் பதிவுசெய்யப்பட்ட அனைத்து மீறல்களுக்கும் தள்ளுபடி பொருந்தும்.
#tamilgulf